spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது"- வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது”- வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பதற்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதாக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!

கருணாநிதியின் கனவுகள் நிறைவேறப்போகும் காலம் வரும் காலம் என்றும், கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர் நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது. வழக்கமாய் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் அல்ல இது. இந்த கட்சி ஆட்சியா, அந்த கட்சி ஆட்சியா என்பதற்கான விடையல்ல இந்த தேர்தல். இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, இருக்க முடியாத என்பதற்கான தேர்தல் இது.

‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!

நீங்கள் சொல்வீர்களே, தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று, இந்தியாவுக்காக குரல் எழுப்பி வேண்டுமென்று, அப்படிதான் இந்தியாவுக்கான குரலை எழுப்பத் தொடங்கியிருக்கிறோம். அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு. இந்தியாவுக்கான பாதை அமைத்ததும் தமிழ்நாடு, இது இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ