Homeசெய்திகள்இந்தியாகிணறு குபுகுபுவென எரிந்ததால் பதற்றம்

கிணறு குபுகுபுவென எரிந்ததால் பதற்றம்

-

கிணறு குபுகுபுவென எரிந்ததால் பதற்றம்

கேரளாவில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டு கிணறு திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் வீட்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின்மோட்டாரை வீட்டின் உரிமையாளர் இயக்கி உள்ளார். அப்போது கிணறு தீப்பிடித்து எரிந்துள்ளது. சற்று நேரத்தில் தீ எரியும் தாக்கம் அதிகரித்ததால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து தீப்பிடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் மேலே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சீரட்டா மலை என்ற இடத்தில் டீசல் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்துள்ளது. இதிலிருந்து சுமார் 20000 லிட்டர் டீசல் வரை வெளியேறி உள்ளது. டேங்கரிலிருந்து வெளியேறிய டீசல் பூமிக்குள் சென்று நீரூற்று வழியாக கிணற்றுக்குள் வந்து தேங்கி இருந்திருக்கிறது. இது குறித்து அறியாமல் மோட்டார் இயக்கிய போது மின்சாரம் கசிந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது தெரியவந்துள்ளது.

 

டேங்கர் லாரியில் கசிந்த டீசல் பூமிக்குள் சென்று நீரூற்று வழியாக தற்போது இங்குள்ள பல வீட்டு கிணறுகளில் வந்து தேங்கியுள்ளது. அப்புறப்படுத்துவதற்கு கிணறுகளில் உள்ள தண்ணீரை வெளியே எடுத்து எரித்து தான் அப்புறப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

MUST READ