spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!

-

- Advertisement -

 

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!
File Photo

தமிழகத்தில் புதிதாக மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

we-r-hiring

“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

நாட்டின் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஓடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்தாண்டு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் மூன்று தனியார் கல்லூரிகளில் தலா 150 என்ற எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக, 450 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன.

“அனுமதியின்றி பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை”- தமிழக அரசு எச்சரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் ஏற்கனவே 10- க்கும் மேற்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்ட நிதி வழங்கியதோடு, அவை அனைத்தும் திறக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ