Homeசெய்திகள்இந்தியாமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மன்மோகன் சிங் பிரித்தானியாவின் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்தவர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் அம்ரித்சர், இந்தியாவில் குடிப்பெயர்ந்தனர்.

அவர் பஞ்சாப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றுள்ளார். 2004 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் 2 முறை தொடர்ச்சியாக நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். அவர் தனது 92-ஆவது பிறந்த நாளை இன்று(செப்டம்பர் – 26) கொண்டாடும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் விலைமதிப்பற்ற சேவை என்றென்றும் நினைவுகூரப்படும்.
அவர் தனது ஞானம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

MUST READ