Homeசெய்திகள்இந்தியாபிரதமர் பதவியேற்பு விழா - ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு

பிரதமர் பதவியேற்பு விழா – ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு

-

- Advertisement -
kadalkanni

பிரதமர் பதவியேற்பு விழா – ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்துள்ள மோடி

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரெயில் ஓட்டுனராக பணிபுரியும் ஐஸ்வர்யா எஸ்.மேனன் என்பவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியேற்பு விழா - ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு

தற்போது சென்னை – விஜயவாடா, சென்னை – கோவை பிரிவில் தொடக்க நாள் முதலே ‘வந்தே பாரத்’ ரயில்களில் பணியாற்றி வரும் ஐஸ்வர்யா மேனன் 2 லட்சம் மணி நேரம் ரயில் ஓட்டுனராக பணியாற்றி உள்ளார்.

ஆட்சியமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு (apcnewstamil.com)

அவர் தனது பணியில் காட்டும் சுறுசுறுப்பு மற்றும் ரயில்வே சிக்னலிங் பற்றிய ஆழமான அறிவிற்காக மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

MUST READ