Homeசெய்திகள்இந்தியாகட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப்பாதை : சிக்கிய 40 தொழிலாளர்கள்..

கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப்பாதை : சிக்கிய 40 தொழிலாளர்கள்..

-

Tunnel Collapsed in Uttarakhand
உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமான பணியின்போது சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி நகருக்கு புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் ஒரு பகுதியாக சில்க்யாரா – தண்டல்ஹன் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மலைப்பகுதியில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. சுமார் 40 தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் , பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது.

Tunnel Collapsed in Uttarakhand

எதிர்பாராத விதமாக 150 மீட்டர் அளவிலான சுரங்கப்பாதை விழுந்ததில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சுரங்கத்தின் அடியில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நல்வாய்ப்பாக தற்போது வரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அதேநேரம் இடிபாடுகளில் சிக்கியுள்ள பல தொழிலாளர்களின் நிலை என்ன என்பதே தெரியாமல் உள்ளது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகின்றன.

MUST READ