மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதியதில் குறைந்தது 275 உயிர்கள் பலியாகின மற்றும் 1000 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் ‘சிக்னல் குறுக்கீடு’ காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே கூறியது.
அந்த வடு மறைவதற்குள், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்விபத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
VIDEO | Two wagons of LPG rake of a goods train derailed while being placed for unloading in Jabalpur last night. No main line movement of trains affected. pic.twitter.com/zPfCsTZ5AF
— Press Trust of India (@PTI_News) June 7, 2023
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “நேற்று இரவு சரக்கு ரயிலின் எல்பிஜி ரேக்கின் இரண்டு வேகன்கள் இறக்குவதற்கு வைக்கப்பட்டிருந்தபோது தடம் புரண்டன. ரயில்களின் மெயின்லைன் இயக்கம் பாதிக்கப்படவில்லை. இரவு நேரம் என்பதால் மீட்புப்பணிகள் அப்போது தொடரமுடியவில்லை. காலை விடிந்த உடன் சீரமைப்பு பணி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது” எனக் கூறினார்.