
ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் கலாச்சாரம், சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அவமதித்து வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம். ரூபாய் 12 லட்சம் கோடிக்கு முறைகேடு செய்ததாக UPA மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு!
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில் தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் கட்சி உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுப்படுத்த வேண்டும். மதத்தை விமர்சித்ததற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதன தர்மத்தை விமர்சித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம்” என்று தெரிவித்துள்ளார்.