UPI பரிவர்த்தனை- கட்டணம் கிடையாது
UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த கட்டணும் வசூலிக்கப்படமாட்டாது என செய்தி வெளியான நிலையில் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் விளக்கம் அளித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கும் UPI/Wallet கட்டணங்கள் வசூலிக்கப்படும் என செய்தி வெளியானது. அதன்படி, ஏப்ரல் 1 வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI/Wallet கட்டணங்களை NPCI பரிந்துரைந்துள்ளது. அதன்படி, எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, Mutual Fund, அரசு, காப்பீடு, ரயில்வேக்கு 1% என கட்டணங்களை NPCI பரிந்துரைந்துள்ளது.
இந்நிலையில் UPI மூலமாக ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப கட்டணமில்லை என்றும், NPCI வழிகாட்தலின்படி எந்தவொரு நுகர்வோருக்கும் கட்டணம் பொருந்தாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. UPI பரிவர்த்தனைக்கோ, வேலட் பரிவர்த்தனைக்கோ கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
இதேபோல் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் கூறிய நிலையில் பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது.