Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் ராஜினாமா

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் ராஜினாமா

-

- Advertisement -

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் ராஜினாமா

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 16 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக, தட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னாள் முதல்வர் என். ரங்கசாமிக்கு எதிராக போட்டியிட்ட வைத்திலிங்கம், டெபாசிட் கூட மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

we-r-hiring

இந்த தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். வைத்திலிங்கம் தலைவர் பதவியில் தொடரக்கூடாது என்றும், உடனடியாக விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், தேர்தல் தோல்விக்கான தார்மீக பொறுப்பை ஏற்று, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்திக்கு வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். அவரது ராஜினாமா புதுச்சேரி காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி

MUST READ