Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார்? - CJP தலைவர் அபிஜீத் திப்கே புகழாரம்!

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார்? – CJP தலைவர் அபிஜீத் திப்கே புகழாரம்!

-

- Advertisement -

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முதன்மைச் செயலாக்கத் தலைவர்கள் குறித்துத் தொழில்முறை அரசியல் அமைப்பான CJP-யின் தலைவர் அபிஜீத் திப்கே செய்தி ஊடகம் ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார்.இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார்? - CJP தலைவர் அபிஜீத் திப்கே புகழாரம்!

அப்போது “இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார்?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் தனித்துவமான துறைகளில் சாதனை படைத்துள்ள முன்னணி முதலமைச்சர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுப் பாராட்டினார்.

we-r-hiring

பொருளாதாரம், சுகாதாரம், கல்வியில் சாதனை
குறிப்பிட்ட துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதித்துள்ள முதலமைச்சர்கள் குறித்து அபிஜீத் திப்கே தெரிவித்ததாவது:

தமிழ்நாடு: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், முதலீடுகளை ஈர்த்து அதை வலுப்படுத்துவதிலும் அம்மாநில முன்னால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்.

கேரளா: கேரளாவில் சுகாதாரத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களைச் செயல்படுத்தி, அம்மாநில சுகாதாரக் கட்டமைப்பை முன்னால் முதலமைச்சர் பினராயி விஜயன் திறம்பட மேம்படுத்தினாா்.

டெல்லி: டெல்லி அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல் தரம் மற்றும் கல்வித் துறையில் புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.

ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் தங்களின் நிர்வாகத்தில் முதன்மைத் துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் தனிக் கவனம் செலுத்திச் சிறப்பான சாதனைகளைப் படைத்து வருகின்றனர் என்று அவர் தனது பேட்டியில் மேலும் சுட்டிக்காட்டினார்.

உத்தரப் பிரதேச தேர்தல் கணிப்பு: பாஜக – சமாஜ்வாதி இடையே 0.1% வித்தியாசத்தில் கடும் போட்டி!

MUST READ