Homeசெய்திகள்இந்தியா"மதத்தில் எது அவசியம்னு சொல்ல நீதிபதிகள் யார்?" - ஹிஜாப் வழக்கின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடிய...

“மதத்தில் எது அவசியம்னு சொல்ல நீதிபதிகள் யார்?” – ஹிஜாப் வழக்கின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடிய ஒவைசி!

-

- Advertisement -

உத்தரப்பிரதேசத்தில் பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இத்தீர்ப்புக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்."மதத்தில் எது அவசியம்னு சொல்ல நீதிபதிகள் யார்?" - ஹிஜாப் வழக்கின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடிய ஒவைசி!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இயங்கி வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பில் சேர விரும்பிய மாணவி ஒருவர், பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

we-r-hiring

நீதிமன்றம் கூறியது என்ன?
இம்மனுவை ஆகஸ்ட் 21 அன்று விசாரணை செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. “பள்ளி சீருடை விதிமுறைகளைத் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்ள மாணவர்களுக்கு உரிமை இல்லை. மேலும், ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மதத்தில் தவிர்க்க முடியாத கட்டாயப் பழக்கம் அல்ல” என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தினர்.

அசாதுதீன் ஒவைசியின் கொந்தளிப்பு
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:

“அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு இஸ்லாமிய மதத்தின் மீதான தாக்குதலாகும். இஸ்லாத்தில் எது அத்தியாவசியமானது, எது அவசியமற்றது என்பதைத் தீர்மானிக்க நீதிபதிகள் யார்? என கேள்வி எழுப்பிய அவர், சீருடையில் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது மட்டுமே சமத்துவம் ஆகிவிடாது என்றார்.

மேலும், உண்மையான சமத்துவம் என்பது மாணவர்களின் மனதில் தான் இருக்க வேண்டும். இது எங்கள் மதம்; இதில் எது அவசியம் என்பதை நாங்களே முடிவு செய்வோம். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பிரிவு 19 (சுதந்திர உரிமை) மற்றும் பிரிவு 25 (மத சுதந்திர உரிமை) ஆகியவற்றிற்கு எதிரானது” என்று ஒவைசி சாடியுள்ளார். பள்ளியில் ஹிஜாப் அணிவது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பும், அதற்கு எழுந்த அரசியல் எதிர்வினைகளும் தற்போது நாடு முழுவதும் மீண்டும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

வயநாட்டில் 25,000 சதுர அடியில் பிரம்மாண்ட பூக்கோலம்: 10,000 கிலோ பூக்களுடன் படைக்கப்பட்ட சாதனை!

MUST READ