Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் சோகம்: நோய் பாதிப்பு, வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை!

ஆந்திராவில் சோகம்: நோய் பாதிப்பு, வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை!

-

- Advertisement -

ஆந்திர மாநிலத்தில் நோய் பாதிப்பு மற்றும் கடும் நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 5 பேர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் சோகம்: நோய் பாதிப்பு, வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை!

ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பட்டலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (36). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், ஒரு இளைய சகோதரியும் உள்ளனர். கணவரைப் பிரிந்த இரண்டு மூத்த சகோதரிகளும், மூத்த சகோதரியின் 15 வயது மகன் மணிகண்டாவும் சுதாகருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

we-r-hiring

வறுமையும் நோய் பாதிப்பும்
சமீபகாலமாக சுதாகர் மற்றும் அவரது சகோதரிகளுக்குத் தொடர்ச்சியாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியிலும் வறுமையிலும் சிக்கித் தவித்தது. நோயின் கொடுமையும், வறுமையின் பிடியும் தாள முடியாமல் மனமுடைந்த குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

கோயில் விடுதியில் அரங்கேறிய கொடூரம்
இதையடுத்து, சுதாகர் தனது சகோதரிகள் மற்றும் மருமகன் மணிகண்டா ஆகிய அனைவரையும் தனது ஆட்டோவில் நந்தியால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஸ்ரீசைலம் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், கோயிலுக்குச் சொந்தமான விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.  இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறை பல மணி நேரமாகத் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அறையின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது சுதாகர் மற்றும் சிறுவன் மணிகண்டா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையிலிருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல் துறை விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த 5 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அதனையடுத்து, 5 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான முழுமையான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சல் தீவிரப் பரவல்: பாஜக அமைச்சர் கிரோடி லால் மீனாவுக்குத் தீவிர சிகிச்சை!

MUST READ