Homeசெய்திகள்இந்தியா“கார் முழுவதும் 3,400 முத்தத்தடங்கள்!” — காதலியின் ஆசையால் இளைஞருக்கு ரூ.5,500 அபராதம் விதித்த போலீஸ்!

“கார் முழுவதும் 3,400 முத்தத்தடங்கள்!” — காதலியின் ஆசையால் இளைஞருக்கு ரூ.5,500 அபராதம் விதித்த போலீஸ்!

-

- Advertisement -

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காதலி ஆசையாகக் கார் முழுவதும் இட்ட 3,400 முத்தத்தடங்களால், இளைஞர் ஒருவருக்குக் போக்குவரத்துப் காவல்துறையினர் ரூ.5,500 அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.“கார் முழுவதும் 3,400 முத்தத்தடங்கள்!” — காதலியின் ஆசையால் இளைஞருக்கு ரூ.5,500 அபராதம் விதித்த போலீஸ்!

சாலையில் முத்தக் கார் – குவிந்த பொதுமக்கள்
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரைச் சேர்ந்தவர் ஆதித்யா சிகாவர். இவர் தனது காரில் நகரின் முக்கிய சாலையில் பயணித்த போது, அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் அவரது காரையே ஆச்சரியத்துடன் உற்று நோக்கினர். சிவப்பு நிற முத்த அடையாளங்களால் நிரம்பியிருந்த அந்த காரைப் பார்த்த பலர், ஆர்வத்துடன் அதனுடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்தப் படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகின.

we-r-hiring

காவல்துறை விசாரணை & அபராதம்
இணையத்தில் வைரலான புகைப்படங்கள் குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் செயல்பாட்டில் இறங்கிய போக்குவரத்துப் காவல்துறையினர், காரின் பதிவு எண்ணைக் (Number Plate) கொண்டு அதன் உரிமையாளரான ஆதித்யா சிகாவரின் முகவரியைக் கண்டறிந்தனர். வாகனத்தின் அசல் வண்ண அமைப்பை (Color Scheme) மாற்றி, போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனத்தைக் கொண்டு வந்ததற்காக அவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.

4 மணி நேர உழைப்பு… பின்னணி என்ன?
விசாரணையில் இதற்கான சுவாரஸ்யப் பின்னணி தெரியவந்தது. வெளிநாட்டில் இணையத்தில் ட்ரெண்டான வீடியோ ஒன்றைப் பார்த்த ஆதித்யாவின் காதலி, அதேபோலத் தனது காதலனின் காரை மாற்ற ஆசைப்பட்டுள்ளார். இதற்காகச் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிட்டு, கார் முழுவதும் 3,400 உதட்டுச் சாயம் கொண்ட முத்தங்களைப் பதித்துள்ளார். இது விதிமுறை மீறல் என்பதைப் காவல்துறையினர் சுட்டிக்காட்டி அறிவுறுத்தியதை அடுத்து, தனது தவறை ஒப்புக் கொண்ட ஆதித்யா அபராதத் தொகையைச் செலுத்தினார். இச்சம்பவம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சிப்ஸ் பாக்கெட், கூல்டிரிங்க்ஸ்களில் ‘சிகப்பு எச்சரிக்கை முத்திரை’: பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியால் பின்வாங்கியதா இந்திய அரசு? 

MUST READ