Homeசெய்திகள்இந்தியாயாசகம் பெற்று சேர்த்து வைத்த ரூ.8.4 லட்சம் பணம்! 30 மூட்டைகளுடன் மறைந்த மூதாட்டி —...

யாசகம் பெற்று சேர்த்து வைத்த ரூ.8.4 லட்சம் பணம்! 30 மூட்டைகளுடன் மறைந்த மூதாட்டி — கர்நாடகாவில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

-

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் காலமானதைத் தொடர்ந்து, அவரது வீட்டிலிருந்து 30 மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.8.4 லட்சம் ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.யாசகம் பெற்று சேர்த்து வைத்த ரூ.8.4 லட்சம் பணம்! 30 மூட்டைகளுடன் மறைந்த மூதாட்டி — கர்நாடகாவில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

மசூதி வாசலில் யாசகம் பெற்ற உன்னிசா
கர்நாடகாவைச் சேர்ந்த உன்னிசா (68) என்ற மூதாட்டி, அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் வாயிலில் அமர்ந்து நாள்தோறும் யாசகம் பெற்றுத் தன் வாழ்க்கையைக் கழித்து வந்தார். மிகவும் எளிய முறையில் வாழ்ந்து வந்த இவர், தனது இறுதி மூச்சு வரை யாசகம் பெறுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

we-r-hiring

வீட்டில் சோதனையிட்ட போது காத்திருந்த அதிர்ச்சி
சமீபத்தில் மூதாட்டி உன்னிசா இயற்கை எய்தினார். அவரது மறைவுக்குப் பிறகு, அவர் வசித்து வந்த வீட்டை மசூதி நிர்வாகத்தினரும் ஊர் பொதுமக்களும் திறந்து ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் அடுக்கப்பட்டிருந்த 30 மூட்டைகளைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த மூட்டைகளைப் பிரித்து சோதித்த போது, அவற்றில் சிறுகச் சிறுகச் சேமித்து வைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.8.4 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சகோதரர்களிடம் ஒப்படைத்த மசூதி நிர்வாகம்
உன்னிசா யாசகம் பெற்றுச் சேர்த்து வைத்த அந்தச் சேமிப்பு முழுவதையும் மசூதி நிர்வாகத்தினர் நேர்மையுடன் கணக்கிட்டனர். பின்னர், அவரது சட்டப்பூர்வமான வாரிசுகளான அவரது சகோதரர்களை வரவழைத்து, அந்த ரூ.8.4 லட்சம் பணத்தைப் பிரித்துக் கொடுத்தனர். இறுதிவரை மிகவும் எளிமையாக வாழ்ந்து மறைந்த யாசக மூதாட்டியின் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும், அதனை உரியவர்களிடம் ஒப்படைத்த மசூதி நிர்வாகத்தின் நேர்மையும் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா, அமெரிக்காவிற்கு 8 நாட்கள் அரசுமுறை பயணம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புறப்படுகிறார்!

MUST READ