Homeசெய்திகள்இந்தியாமாண்டியாவில் பரபரப்பு: பெண் எஸ்.ஐ-யை அறைந்த பாஜக எம்.எல்.ஏ மகள் – பதிலுக்கு கன்னத்தில் பளார்...

மாண்டியாவில் பரபரப்பு: பெண் எஸ்.ஐ-யை அறைந்த பாஜக எம்.எல்.ஏ மகள் – பதிலுக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண் அதிகாரி

-

- Advertisement -

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆர்த்தி உக்கடா கோவிலில், ஆடி மாத அமாவாசை திருவிழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரும், பாஜக எம்.எல்.ஏ-வின் மகளும் ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாண்டியாவில் பரபரப்பு: பெண் எஸ்.ஐ-யை அறைந்த பாஜக எம்.எல்.ஏ மகள் – பதிலுக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண் அதிகாரி

கருவறைக்குள் செல்ல முயன்ற விஐபி!
துமகூரு கிராமப்புற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சுரேஷ் கௌடாவின் மகள் ஐஸ்வர்யா, தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். விஐபி வரிசையில் நின்றிருந்த அவர், கோவிலின் கருவறைக்குள் நேரடியாகச் சென்று தரிசனம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

we-r-hiring

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணை ஆய்வாளர் (SI) சவிதா, கருவறைக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளார்.

கன்னத்தில் பளார் – பதிலடி கொடுத்த பெண் காவலர்!
அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, பெண் அதிகாரி சவிதாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விவாதம் முற்றிய நிலையில், எதிர்பாராத விதமாகப் பெண் காவலர் சவிதாவின் கன்னத்தில் ஐஸ்வர்யா பளார் என அறைந்தார்.

சற்றும் தயங்காத காவல் துணை ஆய்வாளர் சவிதா, உடனடியாக பதிலுக்கு ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் என அறைந்தார். பொதுவெளியில் இரு பெண்மணிகளும் மாறி மாறி அறைந்து கொண்டதால் அங்குப் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பிற காவலர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.

புகார் நிராகரிப்பு & எம்.எல்.ஏ மன்னிப்பு!
இந்த மோதல் குறித்துப் பெண் காவலர் சவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதை காவல்துறையினர் ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், “மற்றொரு காவலரை கருவறைக்குள் அனுமதித்த சவிதா, தன்னை மட்டும் ஏன் தடுக்க வேண்டும்?” என்ற கேள்வியின் அடிப்படையிலேயே இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்துத் அறிந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கௌடா, தனது மகளின் இத்தகைய நடவடிக்கைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
கோவில் வளாகத்தில் நடந்த இந்த காரசாரமான மோதல் மற்றும் ஒருவரையொருவர் அறைந்து கொள்ளும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, கர்நாடக அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சிப்ஸ் பாக்கெட், கூல்டிரிங்க்ஸ்களில் ‘சிகப்பு எச்சரிக்கை முத்திரை’: பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியால் பின்வாங்கியதா இந்திய அரசு? 

MUST READ