spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு!

வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு!

-

- Advertisement -

 

வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு!
Photo: DD

ஜூனியர் பிரிவு மகளிருக்கான ஹாக்கித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வெற்றி கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

we-r-hiring

பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!

ஜப்பான் நாட்டின் ககாமிகாஹாரா (Kakamigahara) நகரில் ஜூனியர் பிரிவு மகளிருக்கான 8வது ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றன. 10 அணிகள் களம் கண்ட இந்த தொடரில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, தென் கொரியா அணியை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. ஜூனியர் பிரிவு மகளிருக்கான ஆசியக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறது.

மகேஷ் பாபு ராஜமௌலி கூட்டணியின் புதிய பட அப்டேட்!

வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்துச் சேர்ந்த இந்திய அணியினருக்கு பூங்கொத்துக் கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். சாம்பியன் பட்டத்தையும், வெற்றிக் கோப்பையையும் வென்ற உற்சாகத்தில் திளைத்த இந்திய அணியினர், தங்கள் கோப்பை மற்றும் பதக்கங்களுடன் குழுவாகப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

MUST READ