இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
ஆளுநர் ரவி பாஜகவின் ஏஜெண்ட்- வைகோ காட்டம்
பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்- க்கு எதிரான புகார்களின் பேரில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி, டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில், அம்மாநில காவல்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், 17 வயது வீராங்கனை அளித்த புகாரின் மீது ஆதாரமோ, முகாந்திரமோ இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்ஸோ வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்துச் செய்ய வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை குறித்துக் கொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 4- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், மற்ற வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில், சட்டப்பிரிவு 354, 354ஏ, 506, 109 உள்ளிட்டப் பிரிவுகளில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீதும், உதவிச் செயலாளர் வினோத் தோமர் மீதும் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைப் பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கை வரும் ஜூன் 22- ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்த மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டுமென ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராடி வந்துள்ளனர். தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசி எதிர்ப்பு தெரிவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு
வீராங்கனைகளின் புகார் சர்வதேச அளவில் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர் ஆகியோரைச் சந்தித்தப் பிறகு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்திருந்தனர்.
வரும் ஜூன் 15- ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்திருந்த நிலையில், குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.