spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வேலை வாய்ப்புராணுவத்தில் சேர வேண்டுமா? புதிய அறிவிப்பு

ராணுவத்தில் சேர வேண்டுமா? புதிய அறிவிப்பு

-

- Advertisement -

ராணுவத்தில் சேர வேண்டுமா? புதிய அறிவிப்பு

ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டிற்காக சேவை செய்ய விரும்பும் இளைஞர்கள் தயவு செய்து இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலக இயக்குநர் தீபக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாகையில் பேட்டி அளித்த அவர், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி ராணுவ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கூறினார்.

we-r-hiring

ராணுவத்தில் இளைஞர்கள் சேர, இணையதளம் இப்போது வெளிப்படை தன்மையுடன் வரிசைப்படி டிஜிலாக்கருடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் இடைத்தரகர்களை நம்பவேண்டாம் என்றும் கர்னல் தீபக்குமார் தெரிவித்தார்.

ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விபரங்களுக்கு 79961 57222 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ