spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வேலை வாய்ப்புஎஸ்பிஐ வங்கியில் 13,735 காலியிடங்கள்...! கல்வித் தகுதி & எப்படி விண்ணப்பிப்பது...!

எஸ்பிஐ வங்கியில் 13,735 காலியிடங்கள்…! கல்வித் தகுதி & எப்படி விண்ணப்பிப்பது…!

-

- Advertisement -

இந்தியாவின் நம்பர் 1 பொதுத்துறை வங்கியான SBI, 13,735 காலிப் பணியிடங்களை (Clerk) நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (டிச. 17) முதல் ஜன. 7 வரை பெறப்படுகின்றன.

எஸ்பிஐ வங்கியில் 13,735 காலியிடங்கள்...! கல்வித் தகுதி & எப்படி விண்ணப்பிப்பது...!சொந்த ஊரில் அரசு வேலை பெற வேண்டும் என்று அனைவரும் கனவில் உள்ளனர் அந்த வகையில் மத்திய அரசின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிளார்க் பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

we-r-hiring

காலிப்பணியிடங்கள்:

13735 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் மட்டும் 340 காலியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26,730 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின்  வயது வரம்பு 20 – 28 வரை என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள்  https://sbi.co.in/ அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்

விண்ணப்பிக்கும் நாள் :

  • விண்ணப்பம் துவங்கும் நாள்: 17.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.01.2025

 

MUST READ