spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வேலை வாய்ப்புவேலை தேடுபவர்களுக்கு இன்று அரிய வாய்ப்பு; தர்மபுரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம்

வேலை தேடுபவர்களுக்கு இன்று அரிய வாய்ப்பு; தர்மபுரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம்

-

- Advertisement -

வேலை தேடும் இளைஞர்களுக்கு தருமபுரியில் இன்று இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இளைஞர்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

we-r-hiring

தருமபுரி மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள். காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசமானதாகும்.

மேலும் விவரங்களுக்கு, dpijobfair2024@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 04342-296188 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே, காலிப்பணியிடங்களுக்கு வேலை தேடும் நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

MUST READ