பஞ்சாப் நேஷனல் வங்கி நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என வங்கி தெரிவித்துள்ளது.
இந்தப் பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 8, 2026 முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 24, 2026 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி காலம் மற்றும் உதவித்தொகை
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 12 மாத பயிற்சி வழங்கப்படும். இதில், 2 வாரங்கள் அடிப்படைப் பயிற்சி, 50 வாரங்கள் பணியிடப் பயிற்சி அளிக்கப்படும்.
வங்கியின் கிராமப்புற, பகுதி கிராமப்புற மற்றும் நகர்ப்புற கிளைகளில் பணியாற்றுவோருக்கு ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்படும். பெருநகரக் கிளைகளில் பணியாற்றுவோருக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.
வயது வரம்பு மற்றும் தளர்வுகள்
ஜனவரி 1, 2026 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் தளர்வு:
SC / ST : 5 ஆண்டுகள், OBC : 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் (PwBD) : 10 ஆண்டுகள். மேலும், பொதுப் பிரிவு / EWS பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்கள் – 35 வயது வரை, OBC, SC / ST பிரிவினர் – 40 வயது வரை வயது தளர்வு வழங்கப்படும்.
தேர்வு மற்றும் சான்றிதழ்
பயிற்சி காலத்தின் முடிவில் நடைபெறும் இறுதி மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு நடைபெறும் தேதி மார்ச் 2026 முதல் வாரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: PNB அதிகாரப்பூர்வ இணையதளமான pnb.bank.in/Recruitment அல்லது BFSI SSC -யின் அதிகாரப்பூர்வமான இணையதளம்: bfsissc.com-யின் மூலமாகவும் விணப்பிக்கிலாம். அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தகுதியுள்ளவர்கள் கடைசி நாளுக்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்… சூப்பர் அறிவிப்பு!
