spot_imgspot_img
Homeசெய்திகள்வேலை வாய்ப்புமத்திய அரசின் டெலிகாம் நிறுவனத்தில் 215 காலிப்பணியிடங்கள் – ITI Limited அறிவிப்பு

மத்திய அரசின் டெலிகாம் நிறுவனத்தில் 215 காலிப்பணியிடங்கள் – ITI Limited அறிவிப்பு

-

- Advertisement -

மத்திய அரசின் டெலிகாம் நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில்கள் நிறவனத்தில் (ITI Limited) அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பக்கும் வழிமுறை மற்றும் பணியிட விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.மத்திய அரசின் டெலிகாம் நிறுவனத்தில் 215 காலிப்பணியிடங்கள் – ITI Limited அறிவிப்பு

மத்திய அரசின் முக்கியமான டெலிகாம் நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில்கள் நிறுவனம் (ITI Limited) பல்வேறு பிரிவுகளில் 215 இளம் நிபுணர்கள் (Young Professional) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், டெலிகாம் உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற அரசு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

மேனேஜ்மெண்ட், தகவல் தொழில்நுட்பம், கணினி ஆய்வகம், டெலிகாம் பாதுகாப்பு, மனிதவள மேலாண்மை (HR), மார்க்கெட்டிங், நிதி, மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த பணியிடங்கள் உள்ளன.

பணியிட விவரங்கள்

இந்த வேலைவாய்ப்பின் கீழ்,

  • பட்டப்படிப்பு – இளம் நிபுணர்கள் : 43
  • டெக்னீஷியன் – இளம் நிபுணர்கள் : 62
  • ஆப்ரேட்டர் – இளம் நிபுணர்கள் : 71
  • HR / நிதி / மார்க்கெட்டிங் – இளம் நிபுணர்கள் : 35
  • மொழி – இளம் நிபுணர்கள் : 4
    என மொத்தம் 215 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதிகள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு பிரிவிற்கு EC, CS, EEE, IT, மெக்கானிக்கல், சிவில் ஆகிய பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் அல்லது MCA, MSc, MBA (எலெக்ட்ரானிக்ஸ், சிஸ், ஐடி, திட்ட மேலாண்மை) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டெக்னீஷியன் பிரிவிற்கு சம்பந்தப்பட்ட பொறியியல் துறைகளில் டிப்ளமோ, BCA, BSc முடித்தவர்கள் தகுதியுடையவர்கள்.

ஆப்ரேட்டர் பிரிவிற்கு பல்வேறு தொழிற்பிரிவுகளில் ITI தேர்ச்சி அவசியம்.

HR, நிதி, மார்க்கெட்டிங் பிரிவிற்கு ஏதேனும் ஒரு டிகிரி, BBA, B.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொழி பிரிவிற்கு இந்தி பாடத்துடன் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்
தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம்:

  • பட்டப்படிப்பு பிரிவு : ரூ.60,000
  • டெக்னீஷியன் பிரிவு : ரூ.35,000
  • ஆப்ரேட்டர் பிரிவு : ரூ.30,000

தேர்வு முறை
இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதி அடிப்படையில் குறுக்கப்பட்ட நபர்கள் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள். குழு கலந்துரையாடல், நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். டெக்னீஷியன் மற்றும் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு திறன் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை & முக்கிய தேதிகள்
ITI நிறுவனப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://itiltd.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பம் தொடங்கிய தேதி : 22.12.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2026

குழு கலந்துரையாடல் / நேர்காணல் : பின்னர் அறிவிக்கப்படும்
மத்திய அரசு துறையில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். உரிய கல்வித் தகுதி உள்ளவர்கள், ஜனவரி 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

ஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த அழைப்பு! சிபிஐயிடம் சிக்கிய ரகசிய வாக்கு மூலம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

MUST READ