டெல்லி போலீஸில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
SSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்.எஸ்.சி வெளியிட்டிருக்கிறது. அதாவது, டெல்லி போலீஸ் பிரிவில் 7,565 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்த விருப்பமும் உள்ளவர்கள் வருகிற 21.10.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.

- பணி விவரம் : கான்ஸ்டபிள் (Constable)
- மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 7,565
காலியிடங்களின் விவரம் :
- Constable (Exe.)-ஆண் – 4,408
- Constable (Exe.)- ஆண் [Ex-Servicemen (Others)] – 285
- Constable (Exe.)-ஆண் [Ex-Servicemen (Commando)] – 376
- Constable (Exe.)-பெண் – 2,496
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 21,700 – ரூ. 69,100
- விண்ணப்பிக்கும் முறை: ssc.gov.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100/- ( எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.)
- விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.10.2025
- தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி தேர்வு (Computer Based Examination),உடற்தகுதி தேர்வு (Physical Test), சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவ பரிசோதனை (Medical Examination)
- தேர்வு விவரம் : 160 மதிப்பெண்களுக்கு 1.30 மணி நேர கால அளவில் கணினி வழி தேர்வு நடைபெறும். இதில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude), கணினி (Computer Fundamentals) ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 90 கேள்விகள் கேட்கப்படும். அதாவது 90 கேள்விகளுக்கு 90 நிமிடங்கள் வழங்கப்படும்.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து முழு அறிவிப்பினைப் பார்வையிடவும். அறிவிப்பை பார்க்க : https://delhipolice.gov.in/RecruitmentFile/63193_NoticeConstable2025.pdf
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லுக்கில் பிரதீப் …. ‘டியூட்’ படத்தின் ட்ரைலர் அப்டேட் கொடுத்த படக்குழு!