spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வேலை வாய்ப்புமத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 170 பேருக்கு வேலை வாய்ப்பு

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 170 பேருக்கு வேலை வாய்ப்பு

-

- Advertisement -

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 170 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 29 ஆகும். தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீடு நிறுவனம் ஆகும்.

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 170 பேருக்கு வேலை வாய்ப்புஇங்கு, Accounts, Generalist  போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

we-r-hiring

Accounts பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். Generalist பணியிடங்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு வயது 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இதனை விண்ணப்பிக்க https://www.newindia.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.850. எஸ்.சி, எஸ்.டி, PWBD பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 29.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ