நமது உடலில் தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் வைரஸ்கள் தாக்கி காய்ச்சல், சளி போன்ற பிரச்சனை உண்டாகிறது. எனவே வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸை வெல்லலாம். இப்போது வேப்பம்பட்டை தேநீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 200 மில்லி லிட்டர்
வேப்பம்பட்டை – சிறிய துண்டு
வேப்பிலை – 7
சீரகம் – 4.5 கிராம்
மிளகு – 4.5 கிராம்
தேன் – சிறிதளவு
வேப்பம்பட்டை தேநீர் செய்யும் முறை:
முதலில் மேற்கண்ட பொருட்களின் அளவை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின் 200 மில்லி லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பின் வேப்பம்பட்டை, வேப்பிலை, சீரகம், மிளகு ஆகிய அனைத்து பொருட்களையும் இடித்து நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும்.
பின் இந்த பொடியை கொதிக்கின்ற நீரில் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
அந்த நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு தேனை கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது தேநீர் தயாராகி விட்டது இந்த தேநீரை காய்ச்சல், சளி ஏற்படும் சமயங்களில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
எனினும் இம்முறையே பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.