சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால் அதை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றுள்ள காலகட்டத்தில் பத்தில் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சினை உண்டாகிறது. சீரான உணவு பழக்கங்களை பின்பற்றுவது, அதிகமாக தண்ணீர் குடிப்பது போன்றவை இந்த பிரச்சனையை தடுக்க உதவும். தற்போது வீட்டிலேயே சிறுநீரக கல்லை கரைக்கும் முறையை பார்ப்போம்.
சிறுநீரக கல்லை கரைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள்.
ஐந்து ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு, பத்து ஸ்பூன் அளவு தேன், ஒரு ஸ்பூன் அளவு மிளகுத்தூள், 3 சாம்பார் வெங்காயம், 250 மில்லி லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் சாம்பார் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் 250 மில்லி லிட்டர் தண்ணீரில் நறுக்கிய வெங்காயம், தேன், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இப்போது ஆரோக்கியமான பானம் தயார். இதனை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகக் கற்கள் கரையும். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் தினமும் இதனை 4 முதல் ஐந்து லிட்டர் வரை குடித்து வருவதினால் கற்கள் முழுவதும் கரைந்து விடும்.
இம்முறையை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.