Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பசியை தூண்டும் சுவையான இஞ்சி குழம்பு;

பசியை தூண்டும் சுவையான இஞ்சி குழம்பு;

-

தேவையான பொருட்கள்;

இஞ்சி                       -50கிராம்

காய்ந்த மிளகாய்       -6

சின்ன வெங்காயம்     -15

பூண்டு பல்                   -3

மஞ்சள் தூள்              -அரை ஸ்பூன்

தேங்காய் துருவல்      -1கப்

எண்ணெய்                -தேவையான அளவு

கடுகு                          -அரை ஸ்பூன்

சீரகம்                         – அரை ஸ்பூன்

கடலை பருப்பு          – அரை ஸ்பூன்

உளுத்தம் பருப்பு      – அரை ஸ்பூன்

மல்லி தூள்                 -1  ஸ்பூன்

புளி                            -நெல்லிக்காய் அளவு

உப்பு                          – தேவையான அளவு

கறிவேப்பிலை            -3 கொத்து

செய்முறை;

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பூண்டினை பொடியாக நறுக்கிக் கொள்ள  வேண்டும்.

வாணலில் 2ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி அதில் இஞ்சியை போட்டு வதக்கி எடுக்கவும்.பிறகு அதில் மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வருக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக ஆற  விட்டு பின்பு மிக்ஸிசாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

மறுபடியும் வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு கடலை பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.பிறகு வெங்காயம், பூண்டு ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.இதில் புளி தண்ணீர்,அரைத்த விழுது மங்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்து எண்ணெய் திரண்டதும் இறக்கிவிடவும்.இப்போது சுவையான இஞ்சி குழம்பு ரெடி .

சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் பசியினை அதிகரிக்கசெய்யும்.

இஞ்சியின் பயன்கள்;

  • பசியினை தூண்டுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • சளியினை கரைத்து வெளியே கொண்டுவரும்.
  • செரிமானப் பிரச்சனையை சரிசெய்கிறது.

MUST READ