- Advertisement -
குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுக்கும் வரம் என்றே கூறுவாா்கள். ஒரு பெண் தாயாகும் போது தான் அவளது வாழ்க்கை முழுமையடைகிறது. பெண்மைக்கான மதிப்பு கூடுகிறது என்பார்கள். அப்படி உயர்வாக சொல்லப்படும் தாய்மை வரம் அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. தற்போதிருக்கும் வாழ்க்கை சூழல் மாற்றம் காரணமாக குழந்தை பாக்கியம் தாமதப்படுவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. எத்தனையோ பெண்கள் பல வருடங்களாக சிகிச்சை எடுத்தும் குழந்தை பாக்கியம் என்பது வெறும் கனவாகவே போய்விடுகிறது.
மேலும் குழந்தைபேறு உண்டாக ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும். அவைகள் என்னென்ன என்பதனை காணலாம்.
- ஆண் பெண் இருவரும் 30 அல்லது 45 நாட்கள் தொடர்ந்து மாதுளம் பழம் இரவில் சாப்பிட வேண்டும்.
- முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.
- செவ்வாழை பழம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். மேலும் அதனை வில்லையாக நறுக்கி தேன் கலந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.
- பாதாம் 5, முந்திரி 5, வேர்க்கடலை 20 மூன்றையும் கலந்து வாயில் போட்டு மென்று, ருசித்து, சுவைத்து சாப்பிட வேண்டும்.
- தினையரிசியுடன் தினைமாவையும் சோ்த்து அதனுடன் தேன் 2 ஸ்பூன் முதல் 4 ஸ்பூன் கலந்து சாப்பிடலாம்.
- சீமை அத்திப்பழம், பேரீச்சை பழம் அடிக்கடி சாப்பிடவும்.
- புழுங்கல் அரிசியுடன், கோதுமை கலந்து கஞ்சி செய்து சாப்பிடலாம்.
இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், மருத்துவாின் ஆலோசனை பெற்று அதன்படி நடந்துக் கொள்ள வேண்டும்.



