இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் கருப்பை நீர்கட்டியினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் உணவு முறைகளை சரியாக பின்பற்றாததுதான். இதனால் பிறப்பதில் சிரமம் உண்டாகிறது.
தற்போது இந்த கருப்பை நீர்க்கட்டிகள் ஏற்படும் காரணங்களையும் தடுக்கும் வழிமுறைகளையும் பார்ப்போம்.

காரணங்கள்:
மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு கருப்பை சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
டெஸ்ட்ரோஜன் அதிகரிப்பது ப்ரொலாக்டின் அதிகரிப்பது போன்ற காரணத்தால் கருப்பை நீர் கட்டி உண்டாகிறது.
தடுக்கும் முறைகள்:
அதிக அளவு உடல் எடை உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும். தவறாமல் உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவு வரை நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.
அதிக கொழுப்பு உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இனிப்பு பண்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறி, கீரை, நார்ச்சத்து வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக விரைவு உணவுகள், துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.