Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அடிக்கிற வெயிலுக்கு ஒருமுறை மலாய் லஸ்ஸி செஞ்சு குடிங்க!

அடிக்கிற வெயிலுக்கு ஒருமுறை மலாய் லஸ்ஸி செஞ்சு குடிங்க!

-

மலாய் லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்:

புளிப்பு இல்லாத கெட்டியான தயிர் – 3 கப்அடிக்கிற வெயிலுக்கு ஒருமுறை மலாய் லஸ்ஸி செஞ்சு குடிங்க!
சர்க்கரை – 5 முதல் 8 ஸ்பூன் ( தேவைக்கேற்ப)
உப்பு – தேவைக்கேற்ப
பால் – 2 கப்
பால் கிரீம் – 1/2 கப்
ஐஸ் கட்டி – தேவையான அளவு
குங்குமப்பூ – சிறிதளவு
ஏலக்காய் – 2

செய்முறை:

முதலில் பாலை நன்றாக காய்ச்சி பால் ஆடை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது கெட்டியான தயிருடன் தேவையான அளவு உப்பு சர்க்கரை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மத்தினால் கடைந்து கொள்ள வேண்டும்.

(மண்பானையில் ஊற்றி கடைந்தால் கூடுதல் சுவை கிடைக்கும்)அடிக்கிற வெயிலுக்கு ஒருமுறை மலாய் லஸ்ஸி செஞ்சு குடிங்க!

கடையும்போது தயிரானது நுரை பொங்கி வரும். இடையிடையில் பால் கிரீம் சேர்த்து கடைந்து கொள்ள வேண்டும்.

நன்றாக தயிர் நுரை பொங்கி வரும் சமயத்தில் ஐஸ்கட்டிகள், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஏலக்காயையும் தட்டி போட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மீண்டும் அனைத்தையும் கடைய தைரானது நன்கு பொங்கி வரும். அச்சமயத்தில் டம்ளர்களை எடுத்து அதில் ஊற்ற வேண்டும். இப்போது அலங்கரிப்பதற்காக சிறிது பாலாடையை லஸ்ஸி மேல் வைத்து பரிமாற வேண்டும்.

மலாய் லஸ்ஸி தயார்.அடிக்கிற வெயிலுக்கு ஒருமுறை மலாய் லஸ்ஸி செஞ்சு குடிங்க!

இந்த லஸ்ஸி வெயிலுக்கு இடமாக உடல் சூட்டை தணிக்க கூடியதாகவும் இருக்கும். மேலும் இதில் பாதாம், பிஸ்தா ஆகியவற்றையும் சேர்த்து குடிக்கலாம்.

MUST READ