இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் தோல்களை சரியாக பராமரிக்காததால் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பாக தோல் வறட்சி உண்டாகிறது. தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு தோல் வறட்சியே அடிப்படையான காரணமாக அமைகிறது. நம் உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் கிடைத்தாலே நம் உடல் முழுவதும் பொலிவாக இருக்கும். நாள் ஒன்றுக்கு 3 லிருந்து 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். இதனால் நம் உடலுக்கு தேவையான நீர் சத்து அதிகமாக கிடைக்கிறது. நீர் மட்டுமில்லாமல் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், தேங்காய் பால் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
1. மேலும் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவடைய தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி, அதனை அப்படியே 5 நிமிடம் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி முகம் பளிச்சென தெரியும்.

2. சிறிதளவு பப்பாளிப் பழத்தை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, அதனை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் பால் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் பளபளப்பாக இருக்கும்.
3. இரண்டு ஸ்பூன் அளவு கடலை மாவு மற்றும் அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் முகத்தில் மசாஜ் செய்து கழுவி வர வெயிலினால் கருமை அடைந்த சருமம் பொலிவடையும்.
இந்த முறைகளை பயன்படுத்தி பார்த்து எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தினமும் இதை பின்பற்றலாம்.