Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ரத்த சோகையில் இருந்து விடுபட எள் உருண்டை சாப்பிடுங்க!

ரத்த சோகையில் இருந்து விடுபட எள் உருண்டை சாப்பிடுங்க!

-

எள் உருண்டை செய்வது எப்படி?

எள் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

எள் – அரை கிலோ
வெல்லம் – அரை கிலோ
பச்சரிசி – 50 கிராம்ரத்த சோகையில் இருந்து விடுபட எள் உருண்டை சாப்பிடுங்க!

செய்முறை

எள் உருண்டை செய்ய முதலில் பச்சரிசியை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் எள்ளை கழுவி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். எள் ஊறிய பின் அதன் மேல் தோலை நீக்க லேசாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வெயிலில் சிறிது நேரம் உலர வைக்க வேண்டும்.

அதன் பிறகு பச்சரிசி, எள், வெல்லம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இடித்த பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை உரலில் இடித்தால் அதிக சுவை கிடைக்கும்.

இப்போது இந்த கலவையை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ரத்த சோகையில் இருந்து விடுபட எள் உருண்டை சாப்பிடுங்க!

பின்னர் வெல்லம், எள் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இது ரத்த சோகை வராமல் தடுக்கும். மேலும் உடல் வலிந்த தோற்றத்தில் இருப்பவர்கள் எள் சாப்பிட குண்டாக மாறலாம். எனவே தினமும் இரண்டு உருண்டை எள் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். அதேசமயம் இந்த எள் மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வாகும்.

குறிப்பு:

வெள்ளை அல்லது கருப்பு எந்த எள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

MUST READ