spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளும் அதன் பயன்களும்!

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளும் அதன் பயன்களும்!

-

- Advertisement -

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை வகைகள்:

துளசி
மூலிகைகளின் ராணியாக இருப்பது துளசி. இவை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதன் இலை, பூ ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. காய்ச்சல் இருக்கும் சமயத்தில் உடனடியாக இந்த துளசி இலைகளை பறித்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். துளசி இலைகளை நீரில் கொதிக்க விட்டு அந்த தண்ணீரை பருகிவர தொண்டை புண் சரியாகும். வாய் துர்நாற்றத்திற்கும், பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் துளசி மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது. தலைவலி ஏற்படும் சமயங்களில் டீ, காபி போன்றவற்றில் இந்த துளசி இலைகளை போட்டு நன்கு கொதிக்க விட்டு பருகி வந்தால் தலைவலி குணமடையும்.வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளும் அதன் பயன்களும்!தூதுவளை
வறட்டு இருமலுக்கு தூதுவளை முக்கிய தீர்வாக விளங்குகிறது. தூதுவளையில் அதிக அளவில் கால்சியம் சத்துக்கள் இருப்பதனால் எலும்புகள் பலமடையும். மேலும் இந்த தூதுவளையில் துவையல் செய்தும் சாப்பிடலாம். தூதுவளையின் தண்டு, இலை, வேர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து அதனை காய வைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா நோய் குணமாகும்.

we-r-hiring

நொச்சி
பலவகையான நொச்சிகள் காணப்படுகின்றன. அந்த வகையில் நீல நொச்சி, வெள்ளை நொச்சி, கரு நொச்சி என பல வகைகள் உண்டு. இவை அனைத்துமே ஒரே மாதிரியான மருத்துவ குணங்கள் கொண்டவைதான். நொச்சி மூலிகைகளை வீட்டில் வளர்ப்பதினால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற சமயங்களில் ஆவி பிடிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நொச்சி இலைகளை காய வைத்து இதனை தலையணை உறைக்குள் போட்டு தூங்கினால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளும் அதன் பயன்களும்!

பூனை மீசை:

இந்த பூனை மீசை நம் நாட்டு மூலிகை அல்ல. இவை பார்ப்பதற்கு பூனையின் மீசை போன்று இருப்பதால் இதற்கு பூனை மீசை என்ற பெயர் வந்தது. இந்த மூலிகையின் இலைகளுடன், பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து காலை, மாலை என இரு வேலைகளில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.

ஆடாதொடை
இருமலுக்கு பயன்படுத்தும் எல்லா வகையான மருந்துகளுமே இந்த ஆடாதொடை மூலிகை பயன்படுத்தப்படுகின்றன. கர்ப்பிணிகள் தனது எட்டாவது மாதத்தில் இருந்து இந்த ஆடாதொடையின் வேரை கசாயம் செய்து குடித்து வந்தால் சுகப்பிரசவம் நிச்சயம். ஆடாதொடையின் இலைகளை நிழலில் காய வைத்து பொடி செய்து காலை மாலை என இரு வேலைகளில் பாலில் கலந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தமும் அதனால் ஏற்படும் படபடப்பும் குறையும்.

கற்றாழை
கற்றாழை என்பது ஒரு அற்புதமான மூலிகை வகையாகும். இவை அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. இந்த கற்றாழை வகைகள் முக அழகை அதிகரிக்கவும் முகத்தில் உள்ள பருக்களை சரி செய்யவும் பயன்படுகிறது. அதே சமயம் தலையில் முடி வளர்வதற்கும், முடி உதிர்தலை தடுக்கவும் பயன்படுகிறது. இந்தக் கற்றாழையை ஜூஸாக குடிப்பதால் மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், பசியின்மை போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம்.வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளும் அதன் பயன்களும்!

ஓமவள்ளி அல்லது கற்பூரவல்லி

ஓமவள்ளி இலைகளை கற்பூரவல்லி என்றும் அழைப்பர். இந்த இலைகளிலிருந்து சாறு எடுத்து அதனை காலை, மாலை என இரு வேலைகள் குடித்து வந்தால் தொண்டையில் வளரும் சதை பிரச்சனைகள் குணமாகும். இந்த இலைகளை பஜ்ஜி போல் செய்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். மேலும் இந்த இலைகளை பறித்து வீட்டின் மூளை முடுக்குகளில் வைப்பதனால் இவை கொசு விரட்டிகள் ஆகவும் பயன்படுகிறது.

MUST READ