குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு:அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் குடல் புண் சரியாகும் அத்துடன் வயிற்றில் உள்ள புழுக்களும் அழியும்.
மணலிக்கீரை சாறில் சிறிதளவு வாய் விளங்கத்தை அரைத்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் அழியும்.
மாதுளம் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வர குடல் பூச்சிகள் குறையும்.
முட்டைக்கோஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை எடுத்து தனித்தனியாக தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். பின் அதிலிருந்து கிடைக்கும் சாறுகளை ஒன்றாக கலந்து ஆறவைத்து குடித்து வந்தால் குடல் புண்கள் குணமடையும்.
வில்வ இலையினை பொடி செய்து அரை டேய் கரண்டி அளவில் பொடியினை எடுத்து அதில் 50 ml அளவு தண்ணீர் கலந்து பருகி வந்தால் குடல் புண் சரியாகும். அதுமட்டுமில்லாமல் குடல் சம்பந்தமான எந்த நோய்களாக இருந்தாலும் குணமடைய தொடங்கும்.
சிறு கீரையை வாரம் ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் குடலில் தங்கி இருக்கும் நஞ்சு மலத்தின் வழியே வெளியேறிவிடும்.
புரசப்பட்டையை நீரில் காய்ச்சி குடிப்பதனால் குடல் வாதம் குணமாகும்.
கொய்யா மரத்தின் கொழுந்து இலைகளை நன்கு மென்று சாப்பிட்டு வர குடல் வாயு குணமடையும்.
இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம் இல்லை என்றால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.