spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் செய்ய வேண்டியவை!

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் செய்ய வேண்டியவை!

-

- Advertisement -

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் செய்ய வேண்டியவை!பெரும்பாலானவர்களுக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கும். இளம் வயதினருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். அதனால் மூக்குப்பகுதி சொரசொரப்பாகவும் பார்ப்பதற்கு அசிங்கமாகவும், கருமையாகவும் தெரியும்.

இதனை தடுக்க வெளியில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு தற்போது இயற்கையான முறையிலேயே ஆரம்பத்திலேயே சரி செய்யும் வழிமுறைகளை பார்ப்போம்.

we-r-hiring

சிறிதளவு உப்பினை நீரில் கலந்து மூக்கின் மேல் தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால் மூக்கின் சொரசொரப்பு சரியாகும்.மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் செய்ய வேண்டியவை!

அதேபோன்று சர்க்கரையை எலுமிச்சை சாற்றில் கலந்து பேஸ்ட் போல மூக்கின் மேல் ஸ்க்ரப்பாக பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

சிறிதளவு ஓட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பால் அல்லது தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை வாரத்திற்கு மூன்று முறை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து அழுக்குகளும் நீங்கும்.

அரை துண்டு தக்காளியை எடுத்து அதனை அப்படியே முகத்தில் மசாஜ் செய்து வந்தால் மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து வழுவழுப்பாக காணப்படும்.மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் செய்ய வேண்டியவை!வெந்நீரில் மஞ்சள் தூள் சேர்த்து அதில் முகத்தை காட்டி ஆவி பிடித்த பின் காட்டன் துணியால் துடைக்க வேண்டும். அதன் பின் உருளைக்கிழங்கை தோல் சீவி சாறு பிழிந்து எடுத்து, அத்துடன் கடலை மாவு சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ