Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கசப்பில்லாத பாகற்காய் சட்னி செய்வது எப்படி?

கசப்பில்லாத பாகற்காய் சட்னி செய்வது எப்படி?

-

பாகற்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

கசப்பில்லாத பாகற்காய் சட்னி செய்வது எப்படி?பாகற்காய் – 2
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
மல்லி – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
வர மிளகாய் – 6
புளி – சிறிதளவு
வெல்லம் – 1 நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள்- சிறிதளவு

பாகற்காய் சட்னி செய்யும் முறை:கசப்பில்லாத பாகற்காய் சட்னி செய்வது எப்படி?

முதலில் பாகற்காயை இரண்டாக நறுக்கி அதில் உள்ள விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

இப்போது ஊற வைத்த பாகற்காய் நீரை வெளியேற்றி இருக்கும். அத்துடன் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் நன்கு பிரட்டி விட வேண்டும். இதன் மூலம் பாகற்காயில் உள்ள கசப்பு குறைந்து விடும்.

அதே சமயம் புளியை நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்போது மிக்ஸியில் பாகற்காய், மல்லி, சீரகம், வரமிளகாய் உப்பு, புளி, வெல்லம், ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.கசப்பில்லாத பாகற்காய் சட்னி செய்வது எப்படி?

அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தாளிப்பதற்காக கொடுக்க வைக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் மிதமான தீயில் 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.

சட்னியின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் மாறும். அதன் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சட்னியை இறக்கி விட வேண்டும்.

இப்போது கசப்பில்லாத பாகற்காய் சட்னி ரெடி.

MUST READ