பாகற்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 1/4 கிலோ
தாளிக்க தேவையான எண்ணெய் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயத்தூள் – 1/4 தேக்கரண்டி
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறிதளவு

செய்முறை:
பாகற்காய் தொக்கு செய்ய முதலில் பாகற்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனை வட்டமாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பின் வட்டமாக நறுக்கிய பாகற்காய்களில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு நாள் முழுக்க காய விட வேண்டும்.
நன்கு உணர்ந்ததும் ஒரு அகன்ற கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
அத்துடன் காய்ந்த பாகற்காய்களையும் போட்டு வதக்க வேண்டும்.
பாகற்காய் பாதி அளவு வெந்து வந்ததும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
பின் புளியை நன்கு கரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தயத்தூள் போன்றவற்றை சேர்த்து கிளற வேண்டும்.
அதன்பின் பாகற்காய் நன்கு வெந்து என்னை பிரிந்து வரும் வரை வதக்கி விட வேண்டும்.
இப்போது பாகற்காய் தொக்கு தயார்.
இதனை எல்லா விதமான சாதத்திற்கும் சைடிஷ் ஆக பயன்படுத்தலாம். அதே சமயம் பாகற்காயினை உணவில் சேர்ப்பதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.