சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சிவப்பு அவலை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
தற்போது சிவப்பு அவல் சப்பாத்தி எப்படி செய்வது என பார்ப்போம்.

சிவப்பு அவல் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் – ஒரு கப்
கோதுமை மாவு – முக்கால் கப்
புளித்த தயிர் – அரை கப்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
சீரகம் -அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அவலை தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தயிர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு மணி நேரம் கழித்து உரிய அவலுடன் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவினை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழிந்த பிறகு மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் என்னை அல்லது நெய் சேர்த்து தேய்த்து வைத்த சப்பாத்திகளை சுட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி தயார்.
வழக்கமாக சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் குருமா போன்ற சைடிஸ்களை பயன்படுத்தி இதனை உண்ணலாம்.