Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கோதுமை மாவில் பிஸ்கட் செய்வது எப்படி?

கோதுமை மாவில் பிஸ்கட் செய்வது எப்படி?

-

கோதுமையில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. கோதுமை உடலுக்கு பலமும் வளமும் சேர்க்கிறது. கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் காணப்படுகிறது. கோதுமை செரிமான பிரச்சனைக்கு உதவியாகவும் மலச்சிக்கல் தீரவும் பயன்படுகிறது. கோதுமை மாவில் பிஸ்கட் போன்று செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு அன்றாடம் கிடைக்க வேண்டிய சத்துக்களும் கோதுமை பிஸ்கட்டின் மூலம் கிடைக்கும். தற்போது கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.கோதுமை மாவில் பிஸ்கட் செய்வது எப்படி?தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – கால் கிலோ
மைதா மாவு – கால் கிலோ
நெய் – தேவைக்கேற்ப
சர்க்கரை – ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் – கால் கப்

செய்முறை:

முதலில் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கோதுமை மாவு, மைதா மாவு, தேங்காய் துருவல், நெய், உப்பு, பொடியாக்கிய சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசையவேண்டும்.கோதுமை மாவில் பிஸ்கட் செய்வது எப்படி?

ஒரு அகன்ற தட்டை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு தடவ வேண்டும். பிசைந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ள வேண்டும். தேய்த்தபின் அதனை வட்டமாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். நெய் தடவிய தட்டில் வெட்டிய துண்டுகளை பரவலாக அடுக்கி வைக்க வேண்டும். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அடுப்பினை மிதமான சூட்டில் வைத்து விட்டு, அடுக்கி வைத்த மாவு துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து பொரித்து எடுக்க வேண்டும். சுவையான கோதுமை பிஸ்கட் ரெடி.

 

 

MUST READ