spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்காரசாரமான கத்தரிக்காய் ஃப்ரை செய்து பார்க்கலாமா?

காரசாரமான கத்தரிக்காய் ஃப்ரை செய்து பார்க்கலாமா?

-

- Advertisement -

கத்தரிக்காய் ஃப்ரை செய்வது எப்படி?

கத்தரிக்காய் ஃப்ரை செய்து பார்க்கலாமா?கத்தரிக்காய் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

we-r-hiring

கத்தரிக்காய் -1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்
மிளகுத்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கத்தரிக்காய் ஃப்ரை செய்வதற்கு கத்தரிக்காயை எடுத்து நன்றாக கழுவி விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு அடி கனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் வெட்டி வைத்த கத்திரிக்காயை சேர்த்து வதக்க வேண்டும். கத்திரிக்காய் பாதி வெந்து வந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும்.

முக்கியமாக அடுப்பினை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காய் முழுவதும் வெந்து வந்த பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விட வேண்டும்.

காரசாரமான கத்திரிக்காய் ஃப்ரை தயார்.கத்தரிக்காய் ஃப்ரை செய்து பார்க்கலாமா?

கத்தரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இவ்வாறு கத்திரிக்காயை ஃப்ரை போல செய்து சாப்பிட்டால் கத்தரிக்காய் விரும்பாதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மதிய உணவுடன் இதனை செய்து கொடுக்கலாம்.

குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கத்தரிக்காய் மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது கத்திரிக்காய், உடலில் உள்ள ரத்த சர்க்கரையை குறைத்து இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கத்தரிக்காயில் நார்ச்சத்துக்களும் அதிகமாக காணப்படுவதால் ரத்த சர்க்கரை அளவை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

MUST READ