spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஒற்றைத் தலைவலியை உடனடியாக சரி செய்ய.... இதை செய்து பாருங்கள்!

ஒற்றைத் தலைவலியை உடனடியாக சரி செய்ய…. இதை செய்து பாருங்கள்!

-

- Advertisement -

ஒற்றைத் தலைவலியை உடனடியாக சரி செய்ய.... இதை செய்து பாருங்கள்!எலுமிச்சம் பழத் தோலை காய வைத்து அரைத்து அதனை தலையில் பற்று போல போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

சிறு கீரை சாறு, பொன்னாங்கண்ணி சாறு , பசு நெய் ஆகியவற்றில் கிராம்பு, ஏலரிசி, மரமஞ்சள், செண்பகப்பூ, வெட்டிவேர், சந்தனம் அதிமதுரம், ஜாதிக்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து தட்டி போட்டு நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.ஒற்றைத் தலைவலியை உடனடியாக சரி செய்ய.... இதை செய்து பாருங்கள்!

we-r-hiring

இஞ்சி துண்டுகளை தட்டி பற்று போல தலையில் போட்டு வந்தால் தலைவலி குணமாகும்.

தாய்ப்பால் சிறிதளவு எடுத்து அதில் குங்குமப்பூவை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தாலும் தலைவலியை சரி செய்யலாம்.

மரக்கொழுந்து, பூண்டு, மிளகு ஆகியவற்றை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வெற்றிலையின் சாறு எடுத்து அதில் இரண்டு அல்லது மூன்று கிராம்பை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தலையின் இரண்டு பொட்டு பகுதிகளிலும் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.ஒற்றைத் தலைவலியை உடனடியாக சரி செய்ய.... இதை செய்து பாருங்கள்!

சீரகம், கிராம்பு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அதனை தலைவலி இருக்கும் சமயங்களில் பருகிவர சூடு குறைந்து தலைவலியும் குறையும்.

சுக்கை தோல் நீக்கி தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கடுக்காய், தோல் மிளகு, நில ஆவாரை ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து நீர் விட்டு காய்ச்சி குடித்து வருவதால் தலைவலி குணமாகும்.

திருநீற்றுப்பச்சிலைகளை நுகர்ந்து பார்ப்பதனால் எவ்வித தலைவலியும் குணமடையும்.

இம்முறைகளை எல்லாம் ஒருமுறை செய்து பார்த்து விட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ