Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முகம் வெள்ளையாக தேங்காய் எண்ணெய் போதுமா?

முகம் வெள்ளையாக தேங்காய் எண்ணெய் போதுமா?

-

நான் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதன்படி தேங்காய் எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருக்கிறது. அதே சமயம் இந்த தேங்காய் எண்ணெயை சருமத்தின் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தலாம். ஆனால் நம்மில் பல பேர் தேங்காய் எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கும் காரணத்தால் முகத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கிறோம். ஆகவே அந்த பிசுபிசுப்பை தவிர்க்க இப்போது ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துக் கொள்ளலாம்.முகம் வெள்ளையாக தேங்காய் எண்ணெய் போதுமா?

வாருங்கள் ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஃபேஸ் பேக் தயாரிக்க தேவையான பொருட்கள்:
ஃபேஸ் வாஷ் கிரீம் – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
சர்க்கரை- 2 ஸ்பூன்

முதலில் மேற்கண்ட மூன்று பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் சிறிதளவு ஃபேஸ் வாஷை ஊற்ற வேண்டும். அதன் பின் தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

இப்போது இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும் கடுமையாக தேய்க்க கூடாது.முகம் வெள்ளையாக தேங்காய் எண்ணெய் போதுமா?

மசாஜ் செய்த பின் இந்த ஃபேஸ் பேக்கை காய விட வேண்டும். காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவி வர நல்ல பலன் கிடைக்கும். இம்முறையை வாரத்திற்கு இரண்டு தடவை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள், பழுப்பு நிறம் ஆகியவை நீங்கி முகம் பொலிவடையும்.

இருப்பினும் இம்முறையை ஒருமுறை பின்பற்றிப் பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ