Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சோம்பின் நற்குணங்கள் பற்றி அறிவோம்!

சோம்பின் நற்குணங்கள் பற்றி அறிவோம்!

-

- Advertisement -

சோம்பு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

சோம்பு என்பது ஜீரணத்திற்கு எந்த அளவு உதவுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எல்லா வீட்டிலும் சமையலறையில் சோம்பு இல்லாமல் இருக்காது. ஆனால் பலருக்கும் இந்த சோம்பு சாப்பிடுவது பிடிக்காது. இந்த சோம்பில் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும். சோம்பில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.சோம்பின் நற்குணங்கள் பற்றி அறிவோம்!

1. பாலூட்டும் தாய்மார்கள் இந்த சோம்பினை உணவில் சேர்ப்பதால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தூண்டப்படுகிறது. அதனால் பால் சுரப்பது அதிகமாகின்றது.

2. செரிமான பிரச்சனையை குறைக்கிறது.

3. ஒரு ஸ்பூன் சோம்பை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி உணவு உண்ட பின் பருகி வந்தால் மலச்சிக்கல் தீரும்.

4. சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

5. கல்லீரலில் இருக்கும் கழிவுகளை எளிதில் வெளியேற்ற இந்த சோம்பு தண்ணீர் பயன்படுகிறது.

6. மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யவும் மலட்டுத்தன்மையை குணப்படுத்தவும் சோம்பு தண்ணீர் பயன்படுகிறது.சோம்பின் நற்குணங்கள் பற்றி அறிவோம்!

ஒரு ஸ்பூன் சோம்பினை முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அதனை வடிகட்டி தண்ணீரை மட்டும் பருகி வரலாம் அல்லது ஒரு ஸ்பூன் சோம்பினை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதனை வடிகட்டி வெதுவெதுப்பான தண்ணீரை மட்டும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இவ்வாறு செய்வதினால் எந்த ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டம்ளர் அளவு குடித்து வரலாம்.

MUST READ