Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

-

- Advertisement -

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது.  நடப்பாண்டின் முதல் காலாண்டில் (Q1) மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் சிப்செட்களில் 32 சதவீத சந்தைப் பங்குடன் மீடியாடெக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 23 சதவீத பங்குடன் குவால்காம் (Qualcomm) இரண்டாவது இடத்திலும், 19 சதவீத பங்குடன் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சிப்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளன.மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்உலகளவில் சுமார் 36 முதல் 40 சதவீதம் வரையிலான சந்தைப் பங்கை மீடியாடெக் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் 51 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கைப்பற்றி, முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. மலிவு மற்றும் நடுத்தர விலை ஸ்மார்ட்போன்களில் சிறந்த செயல்திறனை குறைந்த விலையில் வழங்கும் திறனே மீடியாடெக்கின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. கேமிங் மற்றும் அதிவேக செயல்திறனை விரும்பும் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட டைமென்சிட்டி (Dimensity) தொடர் சிப்செட்கள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை குறைந்த விலை ஸ்மார்ட்போன்களிலும் கொண்டு சேர்க்கும் நோக்கில், தனது பிரத்யேக நியூரல் பிராசசிங் யூனிட் (NPU) தொழில்நுட்பத்தை மீடியாடெக் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் AI சார்ந்த பல அம்சங்களை அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது ஷியோமி (Xiaomi), ரெட்மி (Redmi), ரியல்மி (Realme), ஒப்போ (OPPO) மற்றும் விவோ (Vivo) உள்ளிட்ட முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது பல்வேறு மாடல்களில் மீடியாடெக் சிப்செட்களை பரவலாக பயன்படுத்தி வருகின்றன. மறுபுறம், குவால்காமின் ஸ்னாப்டிராகன் (Snapdragon) சிப்செட்கள் பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சந்தையில் வலுவான இடத்தைத் தக்க வைத்துள்ளன. இருப்பினும், விலை மற்றும் செயல்திறன் சமநிலையை திறம்பட வழங்கும் மீடியாடெக், உலக மொபைல் சிப்செட் சந்தையில் தனது முன்னணியை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.

டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மெகா மாற்றம் – புதிய நடைமுறையை பரிசீலிக்கும் மத்திய அரசு

we-r-hiring

MUST READ