மூட்டு தேய்மானம் என்பது மூட்டுகளில் உள்ள கார்டிலேஜ் சிதைவதால் ஏற்படுவது. இது மூட்டுகளில் வலியை மட்டுமல்லாமல் பலவீனத்தையும் ஏற்படுத்தி நீண்ட காலத்தில் அதிக பிரச்சனையை உண்டாக்கி விடுகிறது. எனவே இதனை சரி செய்ய இயற்கையான மருத்துவ வழிகளை பார்க்கலாம்.
முதலில் சரியான உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டும். அதாவது மீன், சியா விதைகள் போன்ற ஒமேகா-3 கொழுப்புத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை, பன்னீர் போன்ற அதிகமான புரதம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், பருப்பு வகைகள், வெள்ளரிக்காய் ஆகியவைகளில் கால்சியம் மற்றும் விட்டமின் டி இருப்பதனால் இது மூட்டு தேய்மானத்தை சரி செய்ய உதவும்.
மேலும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு தேய்மானத்தை கட்டுப்படுத்த முடியும்.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்: அதிக அளவிலான சர்க்கரை, எண்ணெய், கார்போஹைட்ரேட் சேர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தினமும் மிதமான நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது அவசியம். இது மூட்டுகளை உறுதி செய்ய சிறந்த பயிற்சியாகும். எளிமையான யோகாசனங்களையும் செய்யலாம்.
வீட்டு நிவாரணிகள்:
1. ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் போன்றவைகளை
மூட்டுகளில் தடவலாம்.
2. காய்ந்த வெந்தயம் மற்றும் இஞ்சி ஆகியவற்றை அரைத்து தடவலாம்.
3. மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகளை இடித்து அதனை சுடுதண்ணீரில் அல்லது பாலில் சேர்த்து குடிக்கலாம்.
இருப்பினும் மூட்டு தேய்மானம் கடுமையாக இருப்பின் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது.