காலையில் வெந்நீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்:
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதனால் வயிறு சுத்தமாகும். அதாவது குடலில் இருந்து கழிவுகள் வெளியேறும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடித்துவிட்டு சிறிது நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் , எந்தவித மாத்திரை மருந்துகளும் எடுத்துக் கொள்ளாமல் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கலாம்.
அடுத்தது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கலாம். இது மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து கொழுப்புகளை உருக வைக்கிறது.
சரும பிரச்சனைகள், முடி உதிர்வு கொஞ்சம் பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த முறையை தினமும் பின்பற்றினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
மேலும் வெந்நீர் குடிப்பதனால் உடல் உஷ்ணம் அதிகமாகாது. உடல் உஷ்ணம் குறைந்து சமநிலையில் இருக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் சீராக இருக்கும்.
அடுத்தது மன அழுத்தம், மூட்டு வலி, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் அளவு சூடான நீரை அப்படியே குடிக்கலாம். அல்லது அதில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம். ஆனால் இதனை வயிறு சூடாக இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. (குறிப்பு: வெந்நீர் எடுத்துக் கொண்ட பின்னர் 20 முதல் 30 நிமிடங்கள் கழித்தே காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்). இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.