தழுதாழை மூலிகை சித்த மருத்துவத்தில் வாத நோய்களை குணப்படுத்தும் சிறப்பு மருந்தாக பயன்படுகிறது. இளம்பிள்ளை வாதத்தினால் ஏற்படும் முடக்க நிலை குணமாக இந்த தழுதாளையை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும்.
மூக்கடைப்பு மாந்தம் போன்ற நோய்களையும், சொறி சிரங்கு, காய்ச்சல், உடல் கடுப்பு போன்றவற்றை குணப்படுத்த இந்த தழுதாழை பயன்படுகிறது.
தழுதாழை இலையின் சாறு எடுத்து அதனை காலை, மாலை என இரு வேளைகளில் இரண்டு தேக்கரண்டி அளவு பருகி வந்தால் காய்ச்சல் குறையும்.
தழுதாழை இலை சாற்றை எடுத்து அதில் விளக்கெண்ணெய் சேர்த்து தினமும் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள மேக நோய் குணமாகும்.வாதத்தினால் ஏற்படும் வலியில் இருந்து விடுபட தழுதாழை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை தேவையான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வலி ஏற்படும் இடங்களில் ஒன்று கழுவ வேண்டும்.
தழுதாழை இலையை வதக்கி வீக்கம், வலி ஏற்படும் இடங்களில் கட்டுப்போட்டு வர விரைவில் குணமாகும்.
தழுதாழை இலையை அரிசி கழுவிய தண்ணீரில் வேக வைத்து பின் அதனை துணியில் முடித்து வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுத்து வரலாம்.
இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.
குறிப்பாக தழுதாழை மூலிகை பயன்படுத்தும் முன் சித்த மருத்துவரின் அனுமதி பெற வேண்டும்.