spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மாதவிடாய் கோளாறு நீங்க இது ஒன்னு போதும்!

மாதவிடாய் கோளாறு நீங்க இது ஒன்னு போதும்!

-

- Advertisement -

மாதவிடாய் கோளாறு நீங்க இது ஒன்னு போதும்!இன்றுள்ள பெண்களுக்கு பொதுவான பிரச்சனையாக இருப்பது மாதவிடாய் கோளாறு. நாம் பின்பற்றி உணவு பழக்க வழக்கங்களால் நூற்றில் 80 சதவீத பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் வருங்காலத்தில் குழந்தையின்மை பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இயற்கையான முறையில் வீட்டிலேயே மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யலாம்.
200 கிராம் எள்ளு, 5 மிளகாய் வற்றல், பாக்களவு பெருங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எள்ளை நன்கு கழுவி சுத்தம் செய்து, வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் சிறிது சிறிதாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

we-r-hiring

மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் உப்பு, எள் , பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.மாதவிடாய் கோளாறு நீங்க இது ஒன்னு போதும்!

அரைத்த பொடியை உணவில் சேர்த்து மாதவிடாய் வருவதற்கு முன் சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் வரும் மார்பக வலி, தலைவலி, உடல் கனத்து போதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

மேலும் மூட்டு வலி இருப்பவர்களுக்கு வலியையும் வீக்கத்தையும் சரி செய்ய இந்த உதவியாக இருக்கும். இருப்பினும் இம்முறையை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ