சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை என்பது நம் காலையில் எழுந்ததும் குடிக்கும் டீ, காபியிலிருந்து ஜூஸ், மாலையில் உண்ணும் ஸ்னாக்ஸ் ( தின்பண்டங்கள்) என அனைத்திலும் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சமைக்கும் உணவுகளிலும் கூடுதல் சுமையை தரேன் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துகின்றனர். கடைகளில் விற்கப்படும் சுகர் ஃப்ரீ என்று சொல்லக்கூடிய பொருட்களிலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் கடைகளில் வாங்கி உண்ணும் பிஸ்கட் போன்றவைகளில் வெள்ளை சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதால் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.
இவ்வாறு இந்த வெள்ளை சர்க்கரையினை நாம் ஏதாவது ஒரு வகையில் உட்கொண்டு தான் அந்த நாளை கடத்துகிறோம். மேலும் அதிக அளவில் வெள்ளை சர்க்கரையை நாம் எடுத்துக்கொள்ளும் போது நம் ஆரோக்கியத்திற்கு இது ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதாவது உடல் பருமன், நீரழிவு நோய், இதய நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைகிறது.
எனவே வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம், தேன், பிரவுன் சுகர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வெள்ளை சர்க்கரை உட்பட இவை அனைத்திலுமே ஒரே மாதிரியான ஊட்டச்சத்துக்கள் தான் இருக்கின்றன. அந்த வகையில் இவை அனைத்துமே குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் ஆகியவற்றால் ஆனது தான். இவை அனைத்துமே கூடுதல் கலோரிகளை வழங்குகிறது. ஆகையினால் சர்க்கரை இல்லாமலேயே பழகிக் கொள்வது மிகவும் நல்லது.
- Advertisement -